search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில் 9 இடங்களில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    • அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.
    • இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் பக்ரீத் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது.

    சிறப்பு தொழுகை

    இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது. அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர். இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.

    இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் மற்றும் டவுன் கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், செய்ப்பு மைதீன், சம்சுதீன், செய்யது மசூது, துராப்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் ஜாபர்,அப்துல் அஜீஸ்,மர்வான் தலைமையிலான தொண்டரணியினர் செய்து இருந்தனர்.

    9 இடங்களில் நடைபெற்றது

    இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந்நூர் தவ்ஹீத் திடலில் அஸ்கர், ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் செய்யது அலி, மக்காநகர் தவ்ஹீத் திடலில் ஹாமித் , தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் தென்காசி அப்துல் அஜீஸ் , பாத்திமா நகர் பள்ளி திடலில் சம்சுத்தீ,இக்பால் நகர் ரய்யான் திடலில் அப்துல் அஜீஸ், மஹ்மூதாநகர் தவ்ஹீத் திடலில் யாசிர் மதினா நகர் பள்ளி திடலில் அப்துல் ஸலாம் என நகரில் 9 இடங்களில் நடை பெற்றது.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் அரவிந்த் மேற்பார்வையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    தொழுகைக்கு பின்பு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் மாடுகளை இறைவனுக்காக பலியிட்டனர்.

    அதன் பின்னர் அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    அதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீரணம், சங்கரன்கோவில் , புளியங்குடி, வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.


    Next Story
    ×