அய்யப்ப சுவாமி வீதி உலா

சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்றனர். சுவாமிக்கு காமாட்சி அம்மன் கோவில் சார்பில் ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டது.
அய்யப்ப சுவாமி வீதி உலா
Published on

உடுமலை :

சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்றனர். உடுமலை மற்றும் பல்வேறு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன.

ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமியை வழிபடுகின்றனர். உடுமலை அய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி நேரு வீதி, காமாட்சி அம்மன் கோவிலுக்கு அய்யப்ப சாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமிக்கு காமாட்சி அம்மன் கோவில் சார்பில் ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com