search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோட்டில் மாரடைப்பு, பக்கவாதம் குறித்த  விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கருத்தரங்கில் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த சிறுதானிய கண்காட்சி அரங்குகளை கலெக்டர் சாந்தி பார்வையிட்டார். 

    பாலக்கோட்டில் மாரடைப்பு, பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • பல்வேறு சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் சிறுதானியம் மாவட்டமாக தருமபுரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சத்துகள் நிறைந்த உணவினை சேர்த்துகொள்வதன் மூலம் ஆரோக்கிய வாழ்வினை பெற முடியும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் "இதயத்தை கவனி! வாழ்க்கையை அனுபவி!!" என்ற கருப்பொருளுடன் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் பேசும்போது தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் சாமை, வரகு போன்ற பல்வேறு சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் சிறுதானியம் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடும் வேளாண் பொதுமக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் சாமை, வரகு போன்ற சிறு தானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் சிறுதானிய உற்பத்தியில் அதிக விளைச்சலை பெற முடியும்.

    மேலும், பொதுமக்கள் அன்றாடம் தாங்கள் உண்ணும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வதன் மூலம் நல்ல உடல்நலன், ஆரோக்கியமுடன் இருக்கலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ சிறு தானியங்கள் விநியோகம் செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    ஆகையால் நல்ல உடற்பயிற்சியுடன், சத்துகள் நிறைந்த சரிவிகித உணவினை சேர்த்துகொள்வதன் மூலம் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் இல்லாத ஆரோக்கிய வாழ்வினை பெற முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தி பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த சிறுதானிய கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். மேலும், உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியத்துடன் வைப்பதற்கான யோகச பயிற்சிகளின் செயல்முறை விளக்கம் பள்ளி மாணவ, மாணவியர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மருந்து மற்றும் மாத்திரைகளை காலை, மதியம், இரவு உள்ளிட்ட குறிப்புகள் அச்சிடப்பட்ட கவரில் வழங்கும் முறையினை மாவட்ட கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார்.

    இக்கருத்தரங்கில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஜெயந்தி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜ்குமார், இருதய நோய் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் கண்ணன், நரம்பியல் துறை பேராசிரியர் வெங்கடேசன், பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×