search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.


    தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கினார்.
    • இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பிப்ரவரி 4-ந் தேதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் இலஞ்சி சவுக்கை மூக்கு சந்திப்பு பகுதியில் வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கினார். தென்காசி கேன்சர் சென்டர் இயக்கு னரும், அடையாறு கேன்சர் சென்டர் முன்னாள் தலைமை மருத்துவருமான அருணா சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.


    விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது வாகன ஓட்டுனர்களிடம் இருந்தும் அவர்கள் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பான், குட்கா, புகையிலை, சிகரெட் ஆகிய பொருட்களை புற்றுநோயின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து வாங்கப்பட்டது.

    மேலும் புற்று நோயால் ஒரு தனி நபரின் வாழ்க்கையும், அவரது குடும்பத்தின் நிலைமையும் எவ்வாறு பாதிப்படையும் என கூறப்பட்டது. வாகன ஓட்டுனர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய டி- சர்ட் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தென்காசி கேன்சர் சென்டர் சார்பாக வழங்கப்பட்டது.

    அனைத்து வாகன ஓட்டு னர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    இதில் தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவசந்திரன், தென்காசி மெடிக்கல் சென்டர் இயக்குனர் பாரதிராஜா, பொது மேலாளர் அகமது பாத்திமா, ஆகாஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் மாரியப்பன், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், துணைத் தலைவர் முத்தையா பாண்டியன், அ.ம.மு.க. பிரமுகர் சுப்பிரமணியன் என்ற சுப்பு பாண்டியன், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் , ஆசிரியர்கள் சுரேஷ் ,சங்கர், என்.சி.சி. ஆசிரியர் செந்தில் பாபு , என்.எஸ்.எஸ். ஆசிரியர் குத்தாலம் மற்றும் குற்றாலம் காவல்துறை, தென்காசி போக்குவரத்து துறை, காவல் துறையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்காசி கேன்சர் சென்டர் மருத்துவமனை மருத்து வர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×