search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கையாள்வது குறித்து விழிப்புணர்வு
    X

    விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கையாள்வது குறித்து விழிப்புணர்வு

    • தேனியில் ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாத கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • கலைநிகழ்ச்சிகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சி காமராசர் பஸ் முனையத்தில் ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாத கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி தெரிவித்ததாவது,

    வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வங்கிக்கணக்கை கையாள்வது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் வங்கிகள் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு வரும் போலியான தொலைபேசி அழைப்புகளை எவ்வாறு கையாள்வது, டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தும் போது பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் மற்றும் பொதுமக்கள்,

    வாடிக்கையாளர்களின் பொறுப்பு, அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனை போன்றவை குறித்தும் பிரவுசர், வெப்சைட், ஹேப்ஸ் குறித்தும், பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய இணையதளங்களை பயன்படுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பணம் செலுத்தும் செயலிகளை அவ்வப்போது புதுப்பித்து வைத்தல் மற்றும் தெரிந்த பயனாளிகளுக்கு மட்டுமே பணமாற்றம் செய்தல், பணம் செலுத்தும் போது பெறுபவரின் கோரிக்கை தகவல்களை சரிபார்த்தல், கடன் பற்று அட்டை பயன்படுத்தும் போது அட்டை மீது கவனம் செலுத்துதல், பரிவர்த்தனைக்கு பிறகுவரும் குறுஞ்செய்தியில் உள்ள பரிவர்த்தனை தொகை சரியாக உள்ளதா, ரசீதுகளை பாதுகாப்பான முறையில் கையாள்வது போன்றவைகள் குறித்தும்,

    ஆன்லைன் செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது, ரகசிய எண்களை பாதுகாப்பாக வைப்பது, பணப்பரிவர்த்தனையின ்போது செய்யப்படும் மோசடிகளை எவ்வாறு தவிர்ப்பது, பணத்தை தவறவிட்டால் சைபர்கிரைமில் புகார் அளிக்க வேண்டியதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், பொது இடங்களில் எவ்வாறு சாதனங்களை உபயோகித்து பரிவர்த்தனை செய்தல், பாதுகாப்பற்ற திறந்த வலைதள வசதிகளை உபயோகிக்கும்போது நடைமுறைகளை பின்பற்றி பரிவர்த்தனை செய்தல், பின் நம்பர், ஓ.டி.பி, ரகசிய எண் ஆகியவைகளை ரகசியமாக காப்பது குறித்தும்,

    வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்கிற்கு மாறாக தவறுதலாக பணம் செலுத்தப்பட்டு இருந்தால் அதனை மீட்பது போன்றவற்றை குறித்தும், இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×