ஆண்டிபட்டியில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டிபட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் தலைமை வகித்து விழிப்புணர்வு உரையாற்றினார். ஆண்டிபட்டி ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பு, பொருளாளர் அர்ஜுனன், துணைத் தலைவர் கர்ணா பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிட்டாய் தயாரிப்பு உரிமையாளர்கள் சங்க தலைவர் அக்கினி குமார், செயலாளர் சரவணன், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் பேசும்போது, ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.

குறிப்பாக உணவு கூடங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறிப்பிட்ட அளவு பயன்படுத்திய பின் அதை அரசு வழங்கியுள்ள டின்களில் ஊற்றி சேகரம் செய்து வைத்து , மாதா மாதம் அரசு மூலமாகவே அதனை பயோ டீசல் தயாரிப்புக்காக மறு சுழற்சி அடிப்படையில் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

கடைக்காரர்கள் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி நகர் பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மிட்டாய் சங்க உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com