

வீரபாண்டி :
திருப்பூர் வீரபாண்டி ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை 12-ந்தேதி வரை விழா நடக்கிறது.இதையொட்டி இன்று காலை 6மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லுதல், காலை 9மணிக்கு ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் , 10மணிக்கு ஸ்ரீசவுடேஸ்வர் அம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு பரிவட்டம் கொண்டு செல்லுதல், பகல் 1மணிக்கு ஸ்ரீமாகாளியம்மனுக்கு பெரிய பூஜை, 3மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு மாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 11மணிக்கு கும்பம் கங்கையில் விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை 12-ந்தேதி காலை 6மணி முதல் பகல் 2மணி வரை மஞ்சள் நீராடுதல், பகல் 11மணிக்கு மாகாளியம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவையொட்டி நேற்றிரவு கொங்கு பண்பாட்டுமையம் ஈசன் சலங்கை ஆட்டக்குழுவினரின் பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இது பக்தர்கள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.