ராசிபுரத்தில் சித்தி மகனை கொல்ல முயற்சி சேலம் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கோவை சிறையில் அடைக்கப்பட்டார்

கொடுக்கல் வாங்கல் காரணமாக இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு கத்தியால் முரளியை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
ராசிபுரத்தில் சித்தி மகனை கொல்ல முயற்சி சேலம் வாலிபருக்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனை கோவை சிறையில் அடைக்கப்பட்டார்
Published on

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 37).கூலி தொழிலாளி. இவரது பெரியம்மா மகன் சேலம் அம்மாபேட்டை வைத்திய தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் பிரபு (38). கூலி தொழிலாளி.

இவர் ராசிபுரத்தில் உள்ள அவரது சித்தி மகன் முரளிக்கு கடனாக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கொடுக்கல் வாங்கல் காரணமாக இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு

29-ந் தேதி ராசிபுரத்தில் உள்ள சித்தி மகன் முரளியிடம் பிரபு பணம் திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு கத்தியால் முரளியை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி முரளியின் மனைவி ஜோதி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் ராசிபுரம் போலீசார் பிரபு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி ராசிபுரத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி தீனதயாளன் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்ட னையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரவணன் ஆஜராகி வாதாடினார். நீதிபதியின் தீர்ப்பை அடுத்து பிரபுவை ராசிபுரம் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com