என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெல்லை அருகே பிளஸ்-1 மாணவன் மீது தாக்குதல் - 2 மாணவர்கள் மீது வழக்கு
  X

  நெல்லை அருகே பிளஸ்-1 மாணவன் மீது தாக்குதல் - 2 மாணவர்கள் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மானூர் அருகே உள்ள பல்லிக்கோட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன் பிளஸ்-1 படித்து வருகிறான். நேற்று இவன் பள்ளிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தான்.
  • இதைத்தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவனை மருத்துவமனையில் சேர்ந்தனர்.

  நெல்லை:

  மானூர் அருகே உள்ள பல்லிக்கோட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன் பிளஸ்-1 படித்து வருகிறான். நேற்று இவன் பள்ளிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தான்.

  அப்போது பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்பாக அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிளஸ்-2 மாணவர், அவரது தம்பி 10-ம் வகுப்பு மாணவர் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  இதில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து பிளஸ்-1 மாணவனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

  இதைத்தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவனை மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 2 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Next Story
  ×