search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல்: நட்சத்திர ஏரியில் தோன்றிய செயற்கை நீரூற்று
    X

    கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று.

    கொடைக்கானல்: நட்சத்திர ஏரியில் தோன்றிய செயற்கை நீரூற்று

    • செயற்கை நீரூற்றுகள் சோதனை முறையில் கடந்த2 நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல கோடி செலவில் சாலைகள் அமைத்தல், வடிகால் வாய்க்கால் அமைத்தல், காய்கறி அங்காடி கட்டும் பணி, புதிய நவீன கழிப்பிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் மேலும் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன.

    நட்சத்திர ஏரியில் சுமார் ரூ. 24 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏரியை சுற்றி நடைபாதை சீரமை த்தல் புதிய மின்விளக்குகள் அமைத்தல் படகில் சவாரி செய்வதற்காக அதிநவீன நடைமேடை அமைத்தல் 75 புதிய படகுகள் வாங்குதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் ஏரி தண்ணீரை தூய்மைப்படுத்துவதுடன் அதன் மூலமே செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சீசன் தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செயற்கை நீரூற்றுகள் சோதனை முறையில் கடந்த2 நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இவை சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வண்ணம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர்.

    இதேபோல் மேலும் பல வசதிகள் ஏற்படுத்திதர பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் முயற்சியின் பேரில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை த்தலைவர் மாயக்கண்ணன், ஆணையாளர் நாராயணன், பொறியாளர் முத்துக்குமார் ஆகியோரது முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×