தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றதுநிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
Published on

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. காலையில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ தெய்வங்களான வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருமுறைகள் உள்ளிட்ட பதிகங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க மங்கல வாத்தியங்கள் ஆராதனைகளுடன் சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தா.பழூர் பிள்ளைமார் சமூகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com