புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

டீக்கடையில் விற்பனைரூ 11 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருள் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு விருத்தாசலம் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது டீக்கடை நடத்தி வந்த முனிதிரையன்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது29) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் அவர் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த ரூ 11 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ், கூல் லிப், விமல் உள்ளிட்ட பாக்கு பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி விஜய்யை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com