வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டனர்
வரதராஜ பெருமாள்  கோவிலில் திருக்கல்யாணம்
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த மஞ்சமேடு கிராமத்திலுள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், ஊரின் நன்மைக்காகவும், புதிதாக சுவாமிகளின் பஞ்சலோக சிலைகள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.

தொடர்ந்து 10 மணிக்கு மேல், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீவரதராசப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகள் திருமண கோலத்துடன் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.சுவாமிகளின் இந்த திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளை பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com