சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் வினோத்குமார்(வயது29). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்குமாரை கைது செய்தனர்.

இந்்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தாரர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரை ராஜா ஆஜரானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com