search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெமீன் மேலூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
    X

    ஜெமீன் மேலூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

    • ஜெமீன் மேலூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து வருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த ஜெமீன் மேலூர் கிராமத்தில், மாவட்ட கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணரவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் வைரம் அறிவழகன் தொடக்கி வைத்து கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து வருபவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஹமீது அலி, உதவி இயக்குநர்கள் சொக்கலிங்கம், ரிச்சர்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் செல்வம், செந்தில் வீர இந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செல்வராஜ், மேகநாதன், ஆனந்தநாயகி ஆகியோர் கொண்ட குழுவினர், கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கன்றுகளுக்கு மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், நீண்ட நாள் சினை பிடிக்காத பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் 1,500க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன.


    Next Story
    ×