search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
    X

    ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

    • ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
    • போக்குவரத்து சிக்னலை மதித்து செல்ல வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பற்றி விளக்கினார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏராளமான இளைஞர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருவதால் எதிரே வருபவர்களுக்கு கூட விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே விபத்தை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாஹிரா பானு உள்ளிட்ட போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் டிரைவர்கள் உள்ளிட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விபத்து நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, வாகனத்தில் அதிக ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது, போக்குவரத்து சிக்னலை மதித்து செல்ல வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பற்றி விளக்கினார்.


    Next Story
    ×