search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
    X

    ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

    • ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் பெண் ஊராட்சி துணைத் தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் மாற்றி கொடுத்ததை கண்டித்தும், வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கியதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து துணை தலைவர் மாலதி ராஜேந்திரன் ஆதரவாக தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தா.பழூர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×