ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தினத்தையொட்டி கிரிவல பெருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெளர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கிரிவலம் கோவிலில் தொடங்கி வன்னியர்குழி, கணக்க வினாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. அதைதொடர்ந்து கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார கிராமமக்கள் மற்றும் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com