பாலியல் வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டது மேலும் ரூ.1 லட்சத்து 10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.
பாலியல் வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
Published on

அரியலூர்:

அரியலூர் அருகே உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் மகன் லட்சுமணன்(வயது22). இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து லட்சுமணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது.

இதில் குற்றவாளி லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் லட்சுமணன் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com