மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை

மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்
மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வாய்பேச முடியாத பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆண்டிமடம் அடுத்த சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் செந்தில்(வயது 43). இவர், அதே பகுதியைச் சேர்ந்த வாய்பேச முடியாத 32 வயது பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதேபோல் தொடர்ந்து அவர், மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதால், பெண் கர்ப்பமடைந்தார். இது குறித்து அப்பெண்ணின் உறவினர், ெஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், செந்திலை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி செந்திலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபாரதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com