ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 61 வழக்குகளுக்கு உடனடி தீர்வு

ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 61 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் கூறினார்
ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில்  61 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப் பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

இதில் 61வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் ( நி. எ) கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.

இந்த மக்கள் நீதிமன்றத்தினை மாவட்ட அமர்வு நீதிபதியும் சட்டப்பணி குழு தலைவருமான மகாலட்சுமி துவங்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா, ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி, அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com