ஆண்டிமடம் அரசுப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

150க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது சிகிச்சைக்காக 25 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
ஆண்டிமடம் அரசுப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நடத்தும் ரத்ததான குழு, சிறுநீரக நோய் மற்றும் பொது அறுவை சிகிச்சைக்கான மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒருங்கிணைப்பு நிறுவன தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் முருகன், துணை ஆசிரியர் ஏசுதாஸ் மற்றும் பள்ளி சாரணர் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். அதில் மேல் சிகிச்சைக்காக 25 நபர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ஆண், பெண் இருவருக்கும் சிறுநீரக கற்களால் ஏற்படும் வயிற்று வலி, வாந்தி, நீர் கடுப்பு, சிறுநீரக வீக்கம், சிறுநீரக பாதையில் அடைப்பு மற்றும் பொது அறுவை சிகிச்சையாக பித்தப்பை கல்லுக்கான அறுவை சிகிச்சை, மார்பக கட்டி அறுவை சிகிச்சை, தைராய்டு கட்டி அறுவை சிகிச்சை, குடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, தீக்காயத்திற்கான அறுவை சிகிச்சை, மூலத்திற்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com