என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் அருகே காய்ச்சல் தடுப்பு பணிகள்
- அரியலூர் அருகே காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்றது
- டெங்கு, மலேரியா, உண்ணிக் காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த மாத்தூர், காமரசவல்லி ஆகிய கிராமங்களில் குருவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். காமரசவல்லி கிராமத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சிவராமன், விவின் ஆகியோர் கொண்ட குழுவினர், வீடு வீடாகச் சென்று கொசுப்புழு மற்றும் உண்ணிகள் அழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் டெங்கு, மலேரியா, உண்ணிக் காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவும், கொசு ஒழிப்பு மற்றும் கொசுக்களால் பாதிக்கப்பட்டோருக்கான அரசு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இதே போல் மாத்தூர் கிராமத்தில் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.






