search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா
    X

    அரியலூர் கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா

    • அரியலூர் கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
    • புது பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்பு வைத்து சூரிய பகவானை அனைவரும் வணங்கினர்.

    அரியலூர்:

    அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் சங்கம், குமஸ்தா சங்கம், நீதிமன்ற பணியாளர்கள் சார்பில் தைப்பொங்கலை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மாவட்ட நீதிபதி மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. புது பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்பு வைத்து சூரிய பகவானை அனைவரும் வணங்கினர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. பொங்கல் தின விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி கர்ணன், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், மகிளா நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், சப் கோர்ட் நீதிபதி ஜெயசூர்யா, நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி அறிவு, நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி செந்தில்குமார், முதன்மை மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதி கற்பகவல்லி, கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதி செந்தில்குமார், வழக்குரைஞர்கள், சங்கத் தலைவர்கள் மனோகரன், செல்வராஜ், செயலாளர்கள் முத்துக்குமார், செந்தில்குமார், பொருளாளர்கள் கொளஞ்சியப்பன், மோகன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மணி, சங்கர், முன்னாள் அரசு வழக்கறிஞர் சாந்தி, வக்கீல்கள், குமாஸ்தாக்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×