என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
- வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்றது
- 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில்,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் உயர்க்கல்வி சார்ந்த வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் தலைமை வகித்து, உயர்க்கல்வி தொடர்பான தகவல்கள், அரசு கல்வி உதவித் தொகைகள், நுழைவுத் தேர்வுகள், அரசுத் துறை பணிகள், போட்டித் தேர்வில் எவ்வாறு வெற்றிப் பெறுவது, தனியார் துறை வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவச திறன் பயிற்சி தகவல்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.கல்வி நிலையச் செயலர் கொ.வி.புகழேந்தி முன்னிலை வகித்தார். முன்னதாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் ராஜா, சிவக்குமார் ஆகியோர் செய்தி ருந்தனர். இதில் மாணவ, மாணவிகள் 250 பேர் கலந்து கொண்டனர்.






