அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது 11 -ந் தேதி நடைபெறுகிறது.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு
Published on

அரியலூர்:

அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டின் முதுகலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 11 -ந் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம் எம்.எஸ்சி., கணிதம் இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் தங்களுடைய மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், வகுப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், அசல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும்.

மேற்கண்ட பாடங்களில் சேரும் மாணவர்களுக்கு 13-ந் தேதி முதல் முதல் வகுப்புகள் நடைபெறும்

X

Maalai Malar
www.maalaimalar.com