கட்டுமான ெதாழிலாளர்கள் கோரிக்கை மனு

ஓய்வூதியம், பிரசவகால சம்பளம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது
கட்டுமான ெதாழிலாளர்கள் கோரிக்கை மனு
Published on

அரியலூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம், கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.திருமானூர் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தி பனிடம், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஜீவா தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலையில் அளித்த மனுவில் கட்டட தொழிலாளர் சங்கத்தில் பதிவுப் பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும், ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.பணிக் காலத்தில், பிரசவ கால மூன்று மாதத்து ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ செலவுக்கு நிதி வழங்க வேண்டும். 52 வயது நிரம்பிய பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.வடுகபாளையம், குமாரபாளையம், அரஞ்ச்சேரி, கீழக்காவ ட்டாங்குறிச்சி, கீழப்பழுவூர், வெற்றியூர், கீழக்குளத்ததூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழி லாளர்கள், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com