search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • அரியலூரில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் காமராஜர் சிலை அருகே அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை புகுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், உடனடியாக ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். நகர தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் சந்தானம், பழனிசாமி, கலைச்செல்வன், மாநில பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகர், மகளிர் அணி மாரியம்மாள் மற்றும் வட்டாரத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×