265 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்மனுக்கள் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
265 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 265 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஈஸ்வரன், இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com