search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் காவலாளி மீது தாக்குதல்
    X

    ஜெயங்கொண்டத்தில் மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் காவலாளி மீது தாக்குதல்

    • ஜெயங்கொண்டத்தில் மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் காவலாளியை தாக்கினர்
    • புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விக்கிரமை கைது செய்தனர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் இடையார் காலனி தெருவை சேர்ந்த பிச்சபிள்ளை என்பவரது மகன் ரஜினிகாந்த் (வயது 38). இவர் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் ஒப்பந்த அடிப்படையில் (காப்பாளராக) பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் பணியில் இருக்கும் போது குடிபோதையில் வந்த திருக்களப்பூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் கூலி தொழிலாளியான விக்ரம் (36) என்பவர் தன் மனைவி சிவசக்திக்கு குழந்தை பிறந்ததை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

    அப்போது ரஜினிகாந்த் இரவு நேரம் என்பதால் நோயாளிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், காலையில் வந்து பார்க்கலாம் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம் ரஜினிகாந்தை தகாத வார்த்தைகளால் பேசி, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதில் காயமடைந்த ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று, பின்னர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விக்கிரமை கைது செய்தனர். மேலும் அரசு மருத்துவமனை காப்பாளரை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    Next Story
    ×