ஜெயங்கொண்டத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

ஜெயங்கொண்டத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது கருத்தரங்கில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஜெயங்கொண்டத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துதுறை, அரியலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர் பிரியா, சமூகப்பணியாளர் வைஷ்ணவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் முத்துபிரபாகரன் ஆகியோர் புகையிலைப் பொருட்களை புகைக்க மாட்டேன், உட்கொள்ள மாட்டேன், குடும்பத்தினரிடம் நண்பர்களிடம் புகையிலை பற்றிய தீங்கை தெரிவிப்பேன், பயன்படுத்த வேண்டாம் என்று ஊக்குவிப்பேன் என்று ஒவ்வொரு தலைப்பிலும் விரிவுரையாக பேசி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக நர்சிங் கல்லூரி பேராசிரியர் ஆம்பிசா வரவேற்றார். இறுதியில் நர்சிங் டியூட்டர் மீனாட்சி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com