அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குற்றவாளி சுந்தரத்துக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்
அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(வயது80). இவர் சைக்கிள் பஞ்சர் பார்க்கும் கடை வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 வயது சிறுமி தனது சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வந்தபோது சிறுமியை சுந்தரம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சுந்தரத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளி சுந்தரத்துக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து சுந்தரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com