அரியலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அரியலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்
அரியலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, மாவட்ட அணி செயலாளர் மாணவரணி சங்கர், மகளிர் அணி ஜீவா, இளைஞரணி சிவசங்கர், வக்கீல் அணி வெங்கடாஜலபதி, பொதுக்குழு உறுப்பினர் செல்லையா, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சாமிநாதன், வடிவழகன், அசோகன், வைத்தியநாதன், மருதமுத்து, ராமச்சந்திரன், கல்யாணசுந்தரம், விக்ரம் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, செங்கமலை, பாஸ்கர், நகரச் செயலாளர் செந்தில், செல்வராஜ், பேரூராட்சி செயலாளர் அழகேசன், ஸ்டீபன் ராஜ், முன்னாள் அரசு வக்கீல் சாந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் அரசு கொறடா ராஜேந்திரன் பேசுகையில்:- அ.தி.மு.க. நிறுவன தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரியலூரில் வரும் 20-ம் தேதி நடைபெறுகின்றது. எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அரியலூர் மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு கொடுப்பதுடன் பொதுக் கூட்டத்தையும் சிறப்பான முறையில் நடத்திக் காட்ட வேண்டும், குறுகிய காலம் உள்ள நிலையில் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பேசினார். முடிவில் நகரச் செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com