அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டம்

அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டம்
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்ட மன்றத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில், மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, சகிலாதேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனசெல்வி, கீதா, புள்ளியியல் ஆய்வாளர் முகிலன், அலுவலக இளநிலை உதவியாளர் ரமேஷ், உதவியாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிலை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வரவு செலவு கணக்குகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com