அரியலூர் நகராட்சியில் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை-கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவிப்பு

அரியலூர் நகராட்சியில் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவித்தார் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரியலூர் நகராட்சியில் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை-கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவிப்பு
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அரியலூர் நகராட்சியில் 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம். இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com