என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிடம் வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
- விவசாயிடம் வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யபட்டார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்,
இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராசாங்கம் மகன் பசுபதி(எ) தமிழரசன். விவசாயியான இவர், அப்பகுதி முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்ததார். அப்போது அங்கு வந்த 2 பேர், தமிழரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில், இரும்புலிக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிந்து, பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (36), மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வம்(34) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






