ஆவின் முகவராக விண்ணப்பிக்கலாம்

13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. பால் உபபொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆவின் முகவராக விண்ணப்பிக்கலாம்
Published on

திருப்பூர் :

திருப்பூா் ஒன்றியத்தில் ஆவின் முகவராக தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆவின் பொது மேலாளா் எ.பி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் ஒன்றியத்தில் 431 கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 2.05 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு 34 ஆயிரம் லிட்டா் பால் பாக்கெட்டாக உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில், மீதமுள்ள பால் கோவை, ஈரோடு மற்றும் சென்னை இணையத்துக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பூர் ஒன்றியத்தின் மூலம் பால் உபபொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், பன்னீர், டெட்ரா மில்க், டிலைட் பால் மற்றும் குலோப் ஜாம் மிக்ஸ் போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வீரபாண்டி பிரிவிலுள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளர்களை அணுகி முகவர் விண்ணப்பம் பெற்று முகவராக நியமனம் பெற்று பயனடையலாம். மேலும் சரண்யா ,மேலாளர்(விற்பனை) 9080294484, டாக்டர் சுரேஷ், மேலாளர்(விற்பனை) 9865254885 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என ஆவின் பொதுமேலாளர் எ.பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com