search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மேலும் ஒரு சுற்றுலா தளம் - சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் சூரியகாந்தி மலர்கள்
    X

    பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்களை படத்தில் காணலாம்.

    தென்காசியில் மேலும் ஒரு சுற்றுலா தளம் - சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் சூரியகாந்தி மலர்கள்

    • சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர்.
    • கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலி யாக ஆங்காங்கே உள்ளூர் பொதுமக்கள் சிறிய, சிறிய கடைகளையும் அமைத்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருவது குற்றால அருவிகள் என்பதை கடந்து விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ள சூரியகாந்தி மலர்களும் சுண்டி இழுத்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் இருந்து சுரண்டை செல்லும் பகுதி களான சுந்தர பாண்டியபுரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதி களில் இருபுறமும் இருக்கும் வயல்வெளிகளில் விவசாயி கள் அதிக அளவில் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர்.

    இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டதும் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டு தன்னை அறியாமலேயே செல்பி எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

    குறிப்பாக உள்ளூர் பகுதியில் மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்கள் பயிரிட்டுள்ளதை அறிந்து கார்கள் மூலம் குடும்பம், குடும்பமாக படை யெடுத்து வந்து புகைப் படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.

    அது மட்டுமின்றி கேரளாவில் திருமணமான தம்பதிகள் 'போட்டோ சூட்' எடுப்பதற்கும் சூரியகாந்தி மலர்கள் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளனர்.

    விவசாயிகளும் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள எவ்வித தடையும் விதிப்பதில்லை.

    கேரளா சுற்றுலா பயணி களின் வருகை எதிரொலி யாக ஆங்காங்கே உள்ளூர் பொதுமக்கள் சிறிய, சிறிய கடைகளையும் அமைத்துள்ளனர். அவர்களிடம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் வாங்கி சுவைத்து செல்கின்றனர்.

    விபத்து ஏற்படும் அபாயம்

    சூரியகாந்தி மலர்களை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் ஆய்க்குடி- சுரண்டை செல்லும் பிரதான சாலை ஓரங்களில் வாகனங்களை வரிசையாக நிறுத்துகின்றனர்.

    இதனால் அந்தச் சாலையில் பயணம் மேற்கொள்ளும் மற்ற வாகனங்கள் எதிரெதிரே வரும்பொழுது சிறிய, சிறிய விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே வாகனங்களை தனியாக நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


    சூரியகாந்தி மலர்களை பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.



    Next Story
    ×