search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி பாரத்மாண்டிசோரி பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
    X

    இலஞ்சி பாரத்மாண்டிசோரி பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

    • விழாவில் மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடை பெற்றது.
    • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 33-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் கோவை மல்லெர் பல் மருத்துவமனையின் தலைமை பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் திருமலைவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவி ஹர்சிதாஸ்ரீ வரவேற்று பேசினார். மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடை பெற்றது. மாணவி ஸ்வேதா விழாவை தொகுத்து வழங்கினார்.

    ஆலோசகர் உஷா ரமேஷ் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். பாரத்கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

    செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதா பிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுச் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    கடந்த 2022 - 2023-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ -மாணவிகளுக்கு கல்வியில் முதலிடம் மற்றும் 2-ம் இடம் பெற்றவர்களுக்கு தேர்ச்சிக்கான விருதும், பல்துறை விருது, உத்வேக விருது, வருகை பதிவேட்டிற்கான விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் திருமலை வேலு சிறப்புரையாற்றினார்.

    மாணவி சந்திய பிரியா நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பாரத்கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×