விருத்தாசலம் அருகே ெரயிலில் இருந்து விழுந்து அடையாளம் தெரியாத நபர் பலி

விருத்தாசலம் அருகே ெரயிலில் இருந்து விழுந்து அடையாளம் தெரியாத நபர் பலியானார்.இறந்த கிடந்த நபரின் சட்டைப் பையில் 22-ந்தேதியிட்ட ரெயில் டிக்கெட் இருந்தது.
விருத்தாசலம் அருகே ெரயிலில் இருந்து விழுந்து அடையாளம் தெரியாத நபர் பலி
Published on

கடலூர்:

விருத்தாசலத்தில் இருந்து சென்னை செல்லும் ெரயில்வே இருப்பு பாதை அருகே ஆண் பிணம் கிடந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் விருத்தாசலம் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த கிடந்த நபரின் சட்டைப் பையில் 22-ந்தேதியிட்ட ரெயில் டிக்கெட் இருந்தது. இதில் இவர் பெண்ணாடத்தில் இருந்த தாம்பரம் செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். ரெயிலில் பயணம் செய்த அந்த நபர் தவறி விழுந்து இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com