திருநாவலூர் அருகே பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர்

அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநாவலூர் அருகே பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர்
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே சேந்தநாடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதனையடுத்து இன்று காலை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் உடலை பார்த்து இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com