சேலம் அருகே விபத்து- தனியார் நிறுவன ஊழியர் பலி

சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் அருகே விபத்து- தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

சேலம்:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள காட்டுவளைவு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 31), இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மணி ஓமலூரில் இருந்து மேச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com