அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ மகன் உடல்நலக்குறைவால் மரணம்

சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் மஞ்சள்காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு வீரகேரளம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது
அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ மகன் உடல்நலக்குறைவால் மரணம்
Published on

கோவை,

கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் அம்மன் அர்ச்சுனன். இவரது மகன் கோபாலகி ருஷ்ணன் (வயது 39). இவர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், 11 மாதத்தில் செயான் என்ற மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் கோபா லகிருஷ்ணனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மஞ்கள்காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அதன் பின்னர் அவருக்கு மீண்டும் மஞ்சள்காமாலை பாதிப்பு அதிகமானது. இத னையடுத்து கோபாலகிருஷ்ணன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் ரோட்டில் உள்ள திருநகர் 3-வது வீதியில் உள்ள வீட்டிற்கு மதியம் 1 மணியளவில் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு வீரகேரளத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com