search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் நாளை அமாவாசை சிறப்பு வழிபாடு
    X

    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் நாளை அமாவாசை சிறப்பு வழிபாடு

    • வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
    • தொடர்ந்து, 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரதி அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். மூலை அனுமார் வாலில் சனீஸ்வரன் பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    ஆண்டு தோறும் ஆனி அமாவாசை அன்று பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி மூலை அனுமாருக்கு நடைபெறும் தேங்காய் அலங்காரத்திற்கு தேவையான தேங்காய் மட்டை மற்றும் தேங்காய்கள் வாங்கி தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனி அமாவாசை சனிக்கிழமை வருவது சிறப்புக்குரியதாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நாளை (சனிக்கிழமை ) காலை 7 மணிக்கு லட்ச ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் , அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு தேங்காய்களான சிறப்பு அலங்காரமும் அதனைய டுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது. இந்த வழிப்பாட்டி ற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன் , பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×