சேலம் உழவர் சந்தைகளில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 8 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

ஆயுத பூஜையையொட்டி சுவாமிக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை படையிலிட்டு நேற்று ஏராளமானோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனை சூடு பிடித்தது.
சேலம் உழவர் சந்தைகளில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 8 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
Published on

சேலம்:

ஆயுத பூஜையையொட்டி சுவாமிக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை படையிலிட்டு நேற்று ஏராளமானோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதனால் நேற்று காலை முதலே சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனை சூடு பிடித்தது.

இதையோட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம், தாதா–கப்்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர், மேட்டூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், ஆட்டை–யாம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய 11 உழவர் சந்தைகளிலும் சேர்த்து 2 லட்சத்து 86 ஆயிரத்து 382 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களும் சேர்த்து ரூ.1 கோடியே 8 லட்சத்து 14 ஆயிரத்து 191-க்கு விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com