சென்னையில் மீண்டும் விமான சேவை தொடங்கியது

9 மணியில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.விமான சேவை தொடங்கப்பட்டாலும், குறைந்த அளவிலேயே விமானம் இயக்கப்பட்டது.
சென்னையில் மீண்டும் விமான சேவை தொடங்கியது
Published on

கனமழை காரணமாக காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. ஓடுபாதையில் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் இரவு 11 மணி வரை மூடப்படும். அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மழையின் தாக்கம் குறையாததால் இன்று காலை வரை விமான நிலையம் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழைவெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் 9 மணியில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

விமான சேவை தொடங்கப்பட்டாலும், குறைந்த அளவிலேயே விமானம் இயக்கப்பட்டது. இன்றும் 177 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com