என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோடை உழவு செய்ய வேளாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தல்
  X

  காேப்புபடம்

  கோடை உழவு செய்ய வேளாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும்.
  • கோடை உழவு செய்யாதவர்கள் உடனடியாக கோடை உழவு மேற்கொண்டு பயன் பெறலாம்.

  பல்லடம் :

  பல்லடம் வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-பருவ மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பல்லடம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் கோடை உழவு செய்யாமல் இருக்கின்றனர். கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும். மழைக்காலத்தில் செய்யும் உழவை விட கோடை காலத்தில் உழவு செய்வதுதான் முக்கியமானது. மழைக்கால உழவில் குளுமை மட்டும் இருக்கும். கோடை உழவில் குளுமை, வெப்பம் இரண்டும் இருக்கும். இதுதான் விவசாய மண்ணுக்கு முக்கியம். மேட்டுப்பகுதியில் இருந்து, தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவு குறுக்கு வசத்தில் இருக்க வேண்டும்.

  இப்படி நான்கு முறை உழ வேண்டும்.இப்படி உழுதால் மழைநீர் மண்ணுக்குள் இறங்கும்.கோடையில் முதல் மழை பெய்த உடனேயே உழவு செய்ய வேண்டும். வெப்பம் காரணமாக மண்ணின் மேற்புறத்தில் வெடிப்புகள் இருக்கும். அதனால் மண்ணின் சத்துக்கள் ஆவியாகிவிடும்.இதை தடுக்க கோடை உழவு செய்யவேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜன், நைட்ரஜன் உள்ளிட்ட உயிர் சத்துக்கள் இரவு நேரத்தில் பூமி உள்வாங்கி குளிர்ச்சியாகும். மேலும் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட பயிர்களை தாக்கிய பல்வேறு பூச்சிகள், புழுக்கள், அவைகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள் மண்ணில் இருக்கும். கோடை உழவு செய்வதால் அவை கட்டுப்படுத்தப்பட்டு,ஏற்கனவே இருந்த களைகளும் அழிக்கப்படும். எனவே இதுவரை கோடை உழவு செய்யாதவர்கள் உடனடியாக கோடை உழவு மேற்கொண்டு பயன் பெறலாம் .இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  Next Story
  ×