ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க பிரமுகரின் கார் டிரைவர் அடித்து கொலை?

பணம் கையாடல் செய்ததாக கார் டிரைவருக்கும், அ.தி.மு.க பிரமுகருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.இந்நிலையில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை எரித்தனர். புகாரின் பேரில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சுரேஷ்(29). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் அதேபகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான நடராஜன் என்பவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி நடராஜனின் நெய் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாக சுரேசை தனது வீட்டிற்கு வரவழைத்தார். அதன்பிறகு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வீட்டில் கொண்டு சேர்த்தனர். அவரது தாயார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்து சுரேஷ் உடலை எரித்துவிட்டார். இந்நிலையில் சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், இது வெளியில் தெரியாமல் இருக்க அவரது உடலை எரித்து விட்டதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து எரிக்கப்பட்ட சுரேஷ் சாம்பலை போலீசார் எடுத்துச்சென்றனர். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com