என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் காங்கிரசார் மனு அளித்த காட்சி.
ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்-அமைச்சரிடம் காங்கிரசார் கோரிக்கை
- ஆலங்குளம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- ஆலங்குளம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு, ஆலங்குளம் வந்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியம், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவரிடம், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில், தரம் உயர்த்தப்பட்ட ஆலங்குளம் அரசு வட்டார தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.
Next Story






