search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்
    X

    கழிப்பிட நுழைவு வாயிலில் கட்டண விபரத்தை அழிக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்

    • கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் கட்டண கழிப்பறை ஒப்பந்ததாரர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மூடப்பட்டுள்ள பெண்கள் இலவச கழி ப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி நகர், மற்றும் புறநகர் பஸ்ஸ்டாண்டுக்கு தினந்தோறும் தருமபுரி மாவட்டம் மட்டும் இன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தருமபுரி நகர், புறநகர் பஸ்ஸ்டாண்டில் உள்ள தலா இரண்டு என மொத்தம், நான்கு கட்டண கழிப்பறைகளை தனி யாருக்கு ஏலம் விட்டுள்ள நகராட்சி நிர்வாகம், சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய், மலம் கழிக்க, 3 ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், தருமபுரி புறநகர் பஸ்ஸ்டாண்டில் உள்ள ஒரு கட்டண கழிப்பறையில் கட்டண விபரம் இல்லாமல் உள்ளது.

    மற்றொரு கழிப்பறை யில் சிறுநீர், மலம் கழிக்கும் கட்டணம் அழிக்கப்பட்டு ள்ளது. இங்கு சிறு நீர் மற்றும் மலம் கழிக்க பொது மக்களிடம் இருந்து, கட்டாயமாக, 5 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

    இதே போன்று நகர் பஸ்ஸ்டாண்டில் கட்டண விபரங்கள் உள்ள போதும், சிறுநீர், மலம் கழிக்க, ஐந்து ரூபாய் வசூல் செய்யப்படு கிறது.

    கட்டணம் குறித்து பொது மக்கள் கேட்டால், அங்கு பணியில் உள்ளவர்கள், தாங்கள் சொல்லும் கட்டணத்தை தராவிட்டால் கழிவறையில் செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர்.

    இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருவதுடன், வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் கொடுத்து இயற்கை உபாதை கழிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

    மேலும், தருமபுரி பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ஆண்கள் இலவச சிறுநீர் கழிப்பிடம் பயன்பாட்டுக்கு உள்ள போதும், பெண்கள் இலவச சீறுநீர் கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லாததால், பெண் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    நகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் கட்டண கழிப்பறை ஒப்பந்ததாரர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மூடப்பட்டுள்ள பெண்கள் இலவச கழி ப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து தருமபுரி நகராட்சி தி.மு.க., சேர்மன் லட்சுமி நாட்டான் மாது விடம் கேட்ட போது, தருமபுரி பஸ்ஸ்டாண்டுக்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் கட்டண கழிப்பறைகளுக்கு சிறுநீர், மலம் கழிக்க, குளிக்க கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

    இதை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்யதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    Next Story
    ×